முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க - உதயநிதியை விமர்சித்த கஸ்தூரி

By Rajkumar · 5/9/2023

உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து கஸ்தூரி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. சில வாரங்களாகவே தமிழகத்தில் சனாதன சர்ச்சை தலை தூக்கி ஆடி கொண்டிருக்கின்றது. இதனால் சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்திருந்தார். அவர், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய கடமை என்றெல்லாம் பேசி இருந்தார்.

இப்படி உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்ததற்கு பாஜக வினர் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், டெங்கு, மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே. அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க என்று கடுமையாக விமர்சித்து கூறி இருக்கிறார்.

அரசியில் தொடர்பான பதிவுகள் :

இந்த பதிவை கண்டித்து பலரும் கஸ்தூரிக்கு எதிராக கருத்துக்களை போட்டு வருகிறார்கள். தற்போது கஸ்தூரி டீவ்ட் தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை கஸ்தூரி அவர்கள் அரசியல் தொடர்பான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று துணிச்சலாக பதில் கொடுத்து வருகிறார்.

இதை இவர் வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார்.

கஸ்தூரி திரைப்பயணம்:

பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, ,கமல், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி அவர்கள் சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி:

அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார் கஸ்தூரி . அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால், இவரால் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியவில்லை. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full