இடுக்கண் வருங்கால் நகுக, இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக - செந்தில் பாலாஜி கைதை கேலி செய்த பிக் பாஸ் பிரபலம்.

By Siva · 14/6/2023

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தது குறித்து கிண்டலாக நடிகை கஸ்தூரி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை நேற்று நள்ளிரவு திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தார்கள். மேலும், இவரின் கைதுக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வழக்கம் போல் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் யூக்த்தியை பயன்படுத்தி நெஞ்சு வலி வந்து விட்டது என்று கூறினார். இதன் காரணமாக செந்தில் பாலாஜி சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நடிகை கஸ்தூரி அவர்கள் ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

கஸ்தூரி டீவ்ட்:

அதில் அவர், செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார்? ரைடு போகும்போது அமலாக்க துறை மற்றும் வருமானத்துறை அதிகாரிகளுடன் மருத்துவர்களும் அவசியம் செல்ல வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் வலுவில்லாத இதயங்களை கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சிறைச்சாலையிலும் இதயத்திற்கு சிறப்பு சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். காவலர்கள் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயிற்சி பெற வேண்டும்.

கிண்டல் செய்த கஸ்தூரி:

போலீஸ் ஜீபுக்கு பதிலாக கைது செய்த பின் ஆம்புலன்ஸ் பயன்படுத்தலாம் என்று செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார். அதே போல இன்னொரு பதிவில் 'புதிய பழமொழிகள்- கற்பனை - நான் நான் நானேதான். பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன . முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.

இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது - அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது - பாட்டிலும் பத்து ரூபாயும். தற்போது கஸ்தூரியின் இந்த டீவ்ட் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கம் போல் சிலர் கஸ்தூரியின் பதிவிற்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி.

கஸ்தூரி திரைப்பயணம்:

இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் உன் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full