வெறும் மூன்று லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கதிரவன் வெளியிட்ட முதல் வீடியோ.

By Arun · 18/1/2023

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் Adk வெளியேறி இருந்தார். அதே போல இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் அனைத்து போட்டியாளரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர்.

View this post on Instagram

A post shared by VJ Kathirravan (@kathirravanofficial)

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த கதிரவனுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பணப் பையில் இருந்த 3 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் 23லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். கதிரின் இந்த முடிவு பலரால் பாரட்டப்பட்டு இருக்கிறார். அதற்கு காரணம் இவர் இறுதி வாரம் வரை வந்ததே பெரிய விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.

பிக் பாஸுக்கு பின் கதிரவன் முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸில் தனக்கு ஆதரவு கொடுத்த உலகெங்கும் உள்ள தன் ரசிகர்களுக்கு நன்றி என்றும் விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்லிறேன் என்றும் கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாம் முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை ஒரு ஒரு நிமிடத்திற்கும் பணத்தின் முறை கூடிக் கொண்டே இருக்கும் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார்.

எனவே இந்த முறை பணப்பெட்டி தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை பணப்பெட்டியை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற ஒரு மிகப்பெரிய கேள்வியும் எழுந்து இருக்கிறது. மேலும், பிக் பாஸில் இருக்கும் விஜய் டிவி பிரபலங்களான அமுதவாணன் மற்றும் மைனா ஆகிய யாராவது இருவருக்கு பணப் பெட்டி செல்ல வேண்டும் என்றே மீண்டும் பணப் பெட்டி டாஸ்க்கை செட்டப் செய்து இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full