கவினை வச்சி செய்த வனிதா.! விடியோவை பாத்துட்டு உங்கள் ஆதரவு யாருக்குனு சொல்லுங்க.!

By Rajkumar · 3/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே அவர் மற்ற போட்டியாளர்களை ஆட்டிப் படைத்து வருகிறார் அதிலும் கடந்த சில நாட்களாகவே கவினை தான் டார்கெட் செய்து வருகிறார். அதிலும் பார்வையாளர்களுக்கு பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று வேண்டுமென்றே சில சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார் வனிதா. அதனை கடந்த வாரம் அவளிடமே வனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/tamilyoungsters/status/1168601939338153984

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மீண்டும் ஓப்பன் நாமினேஷன் வைக்கப்பட்டிருந்தது. அதில் கவின் நாமினேட் செய்த போது சேரன் மற்றும் ஷெரீனை நாமினேட் செய்திருந்தார். இதற்கான காரணத்தை கூறியிருந்த கவின் சேரன் மற்றும் ஷெரீன் இருவரும் ஏற்கனவே ஒரு உச்சத்தையும் பிரபலத்தையும் அடைந்து விட்டார்கள். எனவே, அவர்கள் தர்ஷன், முகென் லாஸ்லியா போன்றவர்களுக்கு வழி விட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

கவின் சொன்ன இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த வனிதா இங்கே சென்டிமென்ட் பார்ப்பதற்கு எல்லாம் இடம் கிடையாது என்றும் ஒருவர்ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய கூடாது அதற்காக நீங்கள் விட்டுக் கொடுக்கக்கூடாது பின்னர் எதற்காக நீங்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டீர்கள் என்று வாக்குவாதம் செய்தால் அதற்கு கவின் என்னுடைய தனிப்பட்ட கருத்தை தான் நான் கூறுகிறேன் என்று கவின் கூறி இருந்தார்.

கவின் சொன்ன இந்தக் காரணத்தையும் ஏற்றுக்கொள்ளாத வனிதா அதற்கு ஏன் நீ அழுகிறாய் எங்கே அழகு சிம்பதி உருவாக்குவது போல தான் எனக்கு தெரிகிறது. அதனால் நீ அழாதே என்று கூறினார் மேலும், நீ இங்கேஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை என்றால் எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இது போன்ற ஆட்களை எல்லாம் உள்ளே அனுப்பியது மக்களின் தவறு தான் இவரை இத்தனை நாள் வரை வைத்திருக்கும் மக்களை தான் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றார் வனிதா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full