கவின் வெளியேறியதால் கவின் ஆர்மி மெரினாவில் நடத்தப்போகும் மாபெரும் போரட்டம்.! என்னடா இதெல்லாம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை வாங்கி கொண்டு வெளியேறியுள்ளார் என்ற செய்தி தான் சமூக வலைதளத்தில் தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் கவின் எடுத்த இந்த முடிவு கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
https://twitter.com/Troll_BiggBoss/status/1177102183734497280
இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே கவினுக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ஆதரவு இருந்து வந்தது. கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : விஜய் அஜித் ரசிகர்களால் அடி வாங்கிய கவின்.! வைரலாகும் கவினின் பழைய வீடியோ.!
இந்த நிலையில் கவின் வெளியேறினால் தமிழ் நாட்டில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கவின் ஆர்மி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை செய்து வருகின்றனர். அதுவும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜல்லி கட்டு போராட்டத்திற்கு குரல் கொடுத்த ஜூலியை அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
https://twitter.com/Stalin99911122/status/1177111324884471808
ஏற்கனவே கவின் வெளியேற இருக்கிறார் என்ற செய்தியை கேட்டு கவின் ஆர்மி மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. இதனால் கவின் இல்லை என்றால் பிக் பாஸ் இல்லை என்று குறிப்பிடும் வகையில் #nokavinnobiggboss என்ற ஹேஸ் டேக்கையும் கவின் ஆர்மி நேற்றில் இருந்து சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.