பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகர் கவின். இவர் ஆர்ஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருக்கு சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தினால் தன் நண்பர்களின் உதவியால் சின்ன சின்ன ஷார்ட் பிலிமில் நடித்தார். பிறகு குறும்படங்களின் மூலமாக இவருக்கு தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” சீரியலில் நடித்தார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

பிறகு கவின் சினிமாவில் நடிக்க தொடங்கினார். 2015ஆம் ஆண்டு கவின் அவர்கள் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவின் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் கவின் அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த பீட்சா படத்தின் மூலம் தான் கவின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த இன்று நேற்று நாளை படத்தில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை கவின் ரசிகர்கள் அதிகமாக ஷர் செய்து வருகிறார்கள். தற்போது கவின் அவர்கள் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Advertisement