எவ்ளோ பெரிய வார்த்தை சொல்லிட.! இரவில் கண்கலங்கி அழும் கவின்.!

By Rajkumar · 19/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு வழியாக 25 நாட்களை கடந்து விட்டார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா சென்ற பிறகு நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமே இல்லை என்று ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

https://twitter.com/vijaytelevision/status/1152057975856517120

வனிதா சென்ற பிறகு கவின், சாக்க்ஷி மற்றும் லாஸ்லியா ஆகிய மூவருக்கும் இருக்கும் முக்கோண காதல் கதையை தான் திருப்பி திருப்பி காண்பித்து வருகின்றனர். இதனால் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இடையில் மீரா கொஞ்சம் கண்டன்ட் கொடுக்க முயற்சித்தாலும் அதுவும் ஈடுபடவில்லை.

இதையும் பாருங்க : இவர் தான் 17 வது போட்டியாளர்.! புகைப்படத்துடன் உறுதி செய்த சாண்டியின் நெருங்கிய உறவினர்.! 

இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full