தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு இவர் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.

இப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு சென்று தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் நடிகர் கவின் நடித்துள்ள “டாடா” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை கணேஷ் கே பாபு அறிமுக இயக்குனராக படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார். கவின் இப்படத்தில் மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணாதாஸ். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா ஐஸ்வர்யா லட்சிமி போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

Advertisement

கதைக்களம் :

இப்படத்தில் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் ஊதாரியாக சுற்றும் ஒரு கல்லூரி மாணவராக மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் கவின் வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சிந்து என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி வருகிறார் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர் இந்த காதல் ஒரு கட்டத்தில் கர்ப்பமாக மாறுகிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் க்வின் திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே பொறுப்பில்லாமல் சுற்றுகிறார். இதனை பார்த்த சிந்து வருத்தமடைகிறார். இப்படி இருக்கும் நேரத்தில் ஒரு சண்டை வருகிறது.

ட்விஸ்ட் :

அந்த சண்டையில் “நீ செத்துரு” என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கதாநாயகன். இப்படி செல்லும் நேரத்தில் சிந்துவிற்கு கர்ப்ப வலி வந்து மணிகண்டனுக்கு போன் செய்கிறார். இந்த அழைப்பை கண்டு கொள்ளாமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுக்கிறார். இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதனை மருத்துவமனையில் விட்டுவிட்டு சிந்து தன்னுடைய தாயின் வீட்டிற்கு செல்கிறார். இப்படி செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ளவும் மிகப்பெரிய பொறுப்பு மணிகண்டனிற்க்கு வருகிறது. இந்த நிலையில் குழந்தையை வளர்க்கும் மணிகண்டன் திருந்தினாரா? குழந்தையை நல்ல படியாக வளர்த்தார? மீண்டும் தன்னுடைய மனைவியை சந்தித்தாரா? என்பதுதான் மீதி கதை.

Advertisement

நண்பர் கவின் பேட்டி :

படம் வெற்றியடைந்தது கமலஹாசன் போன்ற பல பிரபங்களும் இந்த டாடா படத்தை பாராட்டி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகன் கவின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின் அவருடைய நண்பரை பற்றி உருக்கமான பேசியிருந்தார். அவர் கூறுகையில் “இந்த படத்தை நான் ஒருவருக்கு அர்பணிக்க வேண்டும். அந்த நபர் என்னுடைய நீண்டநாள் நண்பர், தற்போது அவர் இந்த உலக்தில் இல்லை இறந்து விட்டார்.

Advertisement

மணி என்ற கதாபாத்திரத்தின் பெயருக்கு காரணம் :

நான் இயக்குனர் பாபுவிடம் இந்த படத்தின் கதையை கேட்ட பிறகு என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வேறு இருந்தது. நான் அவரிடம் மணி என்று வைத்துக் கொள்ளவா என்று கேட்டேன். அவர் எதற்காக என்று கேட்டார். அதற்கு நான் என்னுடைய நண்பான் பெயர் மணி அவருடைய பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசையாக இருக்கிறது என்று கூறி என்னுடைய கதாபாத்திரத்திற்கு வைத்துக்கொண்டேன்.

என்னுடைய நண்பனுக்கு அர்ப்பணிக்கிறேன் :

நான் முதன் முதலில் சின்னத்திரையில் வந்த போது எனக்கான முதலில் விசில் அடித்தவன் என்னுடைய நண்பன் மணி தான். இன்றைக்கு அவன் இருந்திருந்தால் அவனைவிட மகிச்சியான ஒரு ஆள் இருந்திருக்க மாட்டார்கள். மணி எங்கிருந்தாலும் பார்த்துக்கொண்டிருப்பாய் என்று நம்புகிறேன் இது உனக்காகத்தான் என்று உருக்கமாக பேசியிருந்தார் கவின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பலரும் கவினுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement