பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் வெளியிட்ட முதல் செல்ஃபீ வீடியோ.! என்ன செய்கிறார் பாருங்க.!

By Rajkumar · 3/10/2019

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிகராகவும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

https://twitter.com/Keerthi42561047/status/1179743630648459264

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சரவணன் மீனாட்சி வேட்டையன் கதாபாத்திரம் தான். மேலும், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தது. அதே போல இவரது நடிப்பில் வெளியான நட்புன்னா என்ன தெரியுமா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு மேலும் பிரபலம் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை கவின் தான் அடிக்கடி நாமினேஷனில் இடம்பெற்று வந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர் ரசிகர்களால் காப்பாற்றுபட்டுகொண்டே வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின் முதலில் தனது தாயின் நிலைமையை அறிந்து நேராக தனது தாயையும் அவரது உறவினர்களையும் பார்த்துள்ளார் என்று செய்துகள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் கவின் தனது தாயை ஜாமினில் எடுத்துள்ளதாகவும், மேலும் பணத்தை ஏமாற்றியதாக கூறி வழக்கு தொடர்ந்த நபர்களுக்கு 29 லட்ச ரூபாயை அளிப்பதாக உத்தரவு அளித்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை கவின் இந்த வாரம் பிக் பாஸ் மேடைக்கு வந்தால் அவரது தாயாரும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தியல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை செய்திருந்தார்.

அதில் பணத்திற்காகவும் புகழிற்காகவும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் வாழ்க்கையில் பல்வேறு சிக்கிளை சந்தித்த நான் தற்போது ரசிகர்களின் அன்பை சம்பாதித்து உள்ளதாகவும் இருப்பினும் தனது குடும்பத்தை காற்றுவதும் என்பது கடமை என்றும் பதிவிட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கும் மீண்டும் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

அதே போல கவினும் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது இருப்பினும் கவின் எப்படி இருக்கிறார் அவரது மன நிலை சரியானதா இல்லையா என்று அவரது ரசிகர்ள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கவின், தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அவரே செலஃபீ விடியோவாக எடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

behindtalkies AMP · Quick view
View full