முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ (காலேஜ் வெர்ஷன்) சீரியலில் நடிகராக அறிமுகமானவர் கவின். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தாயுமானவன், சரவணன் மீனாட்சி’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் கவின். தமிழ் சினிமாவில் வெளி வந்த ‘மக்கள் செல்வன்’விஜய் சேதுபதியின் ‘பீட்சா’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் மிக சிறிய ரோலில் நடித்திருந்தார் கவின்.

இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’ படத்தில் ‘சந்திரன்’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். ‘சத்ரியன்’ படத்துக்கு பிறகு கவின் ஹீரோவாக களமிறங்கினார். அந்த படம் தான் ‘நட்புனா என்னான்னு தெரியுமா’. இந்த படத்தினை இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கியிருந்தார். இதில் கவினுக்கு ஜோடியாக பிரபல நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.

Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-யில் நடிகர் கவினும் ஒரு போட்டியாளராக இருந்தார். ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகர் கவினுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். இப்போது ‘லிப்ட்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் கவின். இந்த படத்தினை இயக்குநர் வினித் வரபிரசாத் இயக்கி கொண்டிருக்கிறார்.

இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’ என்ற படத்தில் நடித்திருந்தவர். அந்த படத்தில் ‘தென்றல்’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார் அம்ரிதா ஐயர். அதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Advertisement

இப்போது நடிகை அம்ரிதா ஐயருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவின் மூலம் அவர் தான் ‘லிப்ட்’ படத்துக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்றும், அதற்கு காரணம் படத்தில் எனக்கு ஒரே ஒரு காஸ்டியூம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Advertisement