பிரியா தான் கவின் காதலியா? வைரலாகும் பிரியா டெலீட் செய்த புகைப்படங்கள்.!

By Rajkumar · 30/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில வாரங்களிலேயே பிளே பாய் என்ற பெயர் எடுத்தவர் கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த கவின், சினிமாவில் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அபிராமி தொடங்கி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா வரை தனது மன்மத லீலைகளை அரங்கேற்றி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லாஸ்லியாவிடம் பேசிய கவின், தனக்கு 3 வருட காதல் இருந்ததாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்னர் தான் அந்த காதல் பிரிந்ததாகவும் கூறி இருந்தார். இதனால் கவின் கூறிய அந்த பெண் யார் என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்த நிலையில் அந்த நபர் பிரியா பவானி ஷங்கர் என்று ஒரு புதிய புரளி ஒன்று கிளம்பியுள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் கவினின் தாயர் கைது செய்யப்பட்டார்.! 7 ஆண்டு சிறை தண்டனை.! 

பிரியா பவானி ஷங்கரும் கவினும் விஜய் தொலைக்காட்சியில் ஒன்றாக வேலை செய்த்தவர்கள். இவர்கள் இருவம் இணைந்து கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கியுள்ளனர். எனவே, கவின் குறிப்பிட்ட அந்த நபர் பிரியா பவானி ஷங்கர் தான் என்று கூறி வருகின்றனர். மேலும், இதற்கான வேளைகளில் நெட்டிசன்கள் இறங்கி விட்டனர்.

இந்த நிலையில் கவின் மற்றும் பிரியா பவானி ஷங்கர் தனித் தனியாக ஒரு நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைபடம் ஒரே தேதியில் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் அவசர அவரசமாக நீக்கியுள்ளார்.

அதே போல இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தித்து கொண்ட போது பதிவிடபட்ட புகைப்படங்களை தேடி பிடித்து வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது எனவே, அதில் பதிவாகும் அனைத்தையும் கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவிட்டுள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full