மைக்கை கழட்டிட்டு கவின் லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.! அடித்துக்கும் கூறும் பிரபலம்.!

By Rajkumar · 28/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

இதையும் பாருங்க : பிறந்தநாளன்று தனது மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சூரி.! 

அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இருவு நேரத்தில் தனியாக மைக்கை கழட்டி பேசிய விஷத்தை கமல் விளக்கப்படம் போட்டு காண்பித்திருத்தர். ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசி இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் கவினை வைத்து 'நட்புன்னா என்ன தெரியுமா' என்ற படத்தை தயாரித்த ரவீந்தர் பிக்பாஸ் குறித்து பேட்டி கொடுத்தார். அப்போது இந்த விஷயம் குறித்து பேசிய அவர், இருவரும் சேரனை பற்றி பேசியிருக்கலாம், இல்லையெனில் இருவருக்கும் இடையே தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full