பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கெமிக்கு அடித்த இரண்டு ஜாக்பாட் - என்னுன்னு நீங்களே பாருங்க
இந்தியாவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் எட்டு சீசன்களை கடந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் ஏழு சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த இரண்டு சீசன்களையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது பிக் பாஸ் ஒன்பதாவது சீசன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் கெமி.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள் கூடை பந்து வீராங்கனை. இதை அடுத்து இவர் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த பிரபலத்தின் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவர் நிகழ்ச்சியில் நன்றாகத்தான் விளையாடி வந்தார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை சிறப்பாக தான் செய்து வந்தார். பின் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து கெமி வெளியேறி இருந்தார்.
கெமி குறித்த தகவல்:
இவர் வெளியேறியது நியாயமே இல்லை என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு இந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் மை லார்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கெமி பேட்டி:
இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து கவின் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஹாய் என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கெமி நடிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் கெமி, இப்போது நான் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சசிகுமார் நடிக்கும் மை லார்ட் என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நான் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவே புதிதாக இருக்கிறது.
படம் அப்டேட்:
இதை அடுத்து நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தில் ஒரு வேடிக்கையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நிறைய காட்சிகளில் நான் வருவேன். அவர்களுடன் சூட்டிங்கில் இருந்த அனுபவம் ரொம்ப நன்றாக இருந்தது. ஒவ்வொரு நொடியும் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். கவின் எப்படி நடிக்கணும் என்று சொல்லிக் கொடுத்தார். நயன்தாரா எங்களுடன் ரொம்ப சகஜமாக பழகினார். 2026இல் இந்த படம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்