திருடிய லாஸ்லியா, வெய்யிலில் கட்டிப்போட்ட சேரன்.! இன்றைய நிகழ்ச்சியின் லீக் காட்சிகள்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பமான முதலில்இருந்தே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அதிலும் இயக்குனர் சேரன் தான் லாஸ்லியாவை மகளாக பார்த்து வருகிறார்.
லாஸ்லியா என்ன தவறு செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார் சேரன். ஆனால், கடந்த சில நாடளாகவே லாஸ்லியாவின் பெயர் படு டேமேஜ் ஆகி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லாஸ்லியா வடிவேலுவை பற்றி சொன்ன விடயம் இவர் மீது பெரும் விமர்சனத்தை வைக்க வழி வகுத்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க தற்போது பிக் பாஸ் வீட்டில் நேற்று (ஜூலை 23) போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து தங்களுக்கு ஒடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இதில் சேரன் நாட்டாமையாக நடித்து வருகிறார்.
மேலும், லாஸ்லியா சுட்டித்தனமான பெண்ணாக நடித்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா வீட்டில் இருக்கும் சொம்பை திருடியதால் அவரை அபிராமி மற்றும் நாட்டாமையான சேரன் இருவரும் கார்டன் ஏரியாவில் இருக்கும் நாற்கலையில் கட்டிப்போட்டு விடுகின்றனர்.
இதனால் கடுப்பாகும் கவின், என்னதான் விளையாட்டிற்காக என்றாலும் இப்படியா ஒருவரை வெய்யிலில் கட்டிப்போடுவது என்று லாஸ்லியாவிற்காக வக்காலத்து வாங்குகிறார். உடனே சேரன் தப்பு செய்தால் அப்படி தான் என்று கத்துகிறார். இந்த நிகழ்வு அடுத்த வரப்போகும் ப்ரோமோவில் கூட காண்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.