திரை வாழ்க்கையில் லாஸ்லியாவின் முதல் ஜோடியே குக் வித் கோமாளி அஸ்வின் தான் - வீடியோ இதோ.

By Rajkumar · 24/1/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அஸ்வின் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இரட்டை வால் குருவி சீரியலில் நடித்தவர்.ஆனால் இவர் தொலைக்காட்சியில் மட்டுமல்ல படத்திலும் நடித்துள்ளார் அஸ்வின். தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த "அர்ஜுன் ரெட்டி" படத்தை தமிழில் ரீமேக் செய்து "ஆதித்ய வர்மா" என்ற பெயரில் வெளியான படத்தில்கூட நடித்து இருந்தார் அஸ்வின்.

https://www.youtube.com/watch?v=3UnN2jWjH4w

"ஆதித்ய வர்மா" படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாக நடித்து இருந்தார். ஆனால், இவர் லாஸ்லியாவுடன் ஒரு விளம்பரத்தில் கூட நடித்து இருக்கிறார். ஆம், பிக் பாஸ் 3 மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா முதன் முதலாக கடந்த ஆண்டு 'Blesso Beauty Soap' விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்த விளம்பரபடத்தில் லாஸ்லியாவுடன் நடித்து இருக்கிறார் அஸ்வின். லாஸ்லியாவின் முதல் ஜோடியை அஸ்வின் தான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full