இந்த சோப்பு விளம்பரத்துக்கு முன்னாடியே பிக் பாஸுக்கு பின் லாஸ்லியா நடித்துள்ள இலங்கை விளம்பரம்

By Rajkumar · 29/9/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.

https://www.youtube.com/watch?v=WFeB2BOxmt4

அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என்று அடுத்தடுத்து வெளியாக இருந்தது.இந்த இரண்டு படங்களும் வெளிவராத நிலையில் தற்போது லாஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார். லாஸ்லியா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தினை Axess film factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்க இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=3UnN2jWjH4w

இந்த படத்தை ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் 3 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள லாஸ்லியா தற்போது முதன் முறையாக சோப்பு விளமப்ரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆனால், லாஸ்லியா இந்த விளம்பரத்திற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இதோ அந்த விளம்பரம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full