விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனதே கவின்– லாஸ்லியா காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும், லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

Advertisement

இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் லாஸ்லியாவின் லுக் எப்படி இருக்க போகிறது என்று பலரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியாவை தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த படத்தில் லாஸ்லியாவின் அம்மாவாக நடிப்பது நான் தான் என்று நடிகை கௌரி புனிதன் அறிவித்துள்ளார். இவரை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை, இவர் விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன், அதர்வா நடித்த 100, சசிகுமார் நடித்து வரும் எம் ஜி ஆர் மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Advertisement
Advertisement