லாஸ்லியா காதலிப்பதாக வந்த செய்தி.! இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த அதே நண்பர்.!

By Rajkumar · 10/9/2019

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இம்முறை பல்வேறு பரிட்சயமில்லா போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் லாஸ்லியா தனது அலுவலகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பாஸுலுல்லா முபாரக் என்பவரை காதலித்து வருவதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. மேலும், அதற்கு ஏற்றார் போல அந்த நபரும் லாஸ்லியாவின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரளாக பரவி வருகிறது.

https://twitter.com/FazlullahMTV/status/1171123825708134402

ஆனால், லாஸ்லியா அந்த நபரை காதலித்தாரா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் லாஸ்லியா காதலிப்பதாக சொன்ன நபரே இது குறித்து ட்விட்டரில் விளக்கமழ்ந்துள்ளார். அதில், தவறான விடயங்கள் தொடர்ந்தேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. லாஸ்லியா மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்றவொன்றல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர்.விஷமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full