'புடவையை இப்படி கட்டணும்னு என்ன அவசியம் ? - லாஸ்லியாவின் ஓணம் லுக்கை கண்டு கடுப்பாகும் நெட்டிசன்கள்.

By Arun · 30/8/2023

ஓணம் பண்டிகையை முன்னிட்டு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. தமிழக தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

View this post on Instagram

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் நிகழ்ச்சி பல கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ரவிக்குமார் சொன்ன தெய்வ வாக்கு :

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு கவின் விளக்கம் கொடுத்து இருந்தார்.அதில் அவர் நான் சிங்கிள் தான், எனக்கான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் கிடைக்கவில்லை இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது உறுதி ஆகி விட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

முதல் படமே தோல்வி :

அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் இவர் லாஸ்லியா சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

லாஸ்லியாவின் Transformation :

இதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ எஸ் படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் மாபெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். மேலும், இவர் பதிவிடும் புகைப்படங்களும் கவர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் பலர் இவரது மாற்றத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விமர்சிக்கப்பட்ட ஓணம் புகைப்படங்கள் :

ஆனாலும், விமர்சனங்களை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா. அந்த வகையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் புடவை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்தார். அந்த புகைப்படங்களில் அவரது சேலை விலகி இருப்பதை கண்ட பலர் 'புடவையை இப்படி கட்டணும்னு என்ன அவசியம் ? வேண்டுமென்றே இப்படி செய்ரீங்களா என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full