ஆடு, லிப்ஸ்டிக் போடு, இல்லைனா கவினொடு ஓடு.! லாஸ்லியாவை கழுவி ஊற்றும் இலங்கை தமிழர்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.
https://twitter.com/MSimath/status/1157929867364773888
ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது என்று இப்படி எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.
இதையும் பாருங்க : அடுத்து முகென்-அபியை டார்கெட் செய்யும் சாக்க்ஷி.! கதறி அழுத அபிராமி.!
அதிலும் கடந்த வாரம் சாக்க்ஷி மற்றும் கவின் விஷயத்தில் இவர் நடந்து கொண்ட விதத்தால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதே போல இவருக்கு நடனமாடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் இவரை வெறுப்பவர்கள் கூறி வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட லாஸ்லியாவிற்கு கால் செய்த ஒரு ரசிகை நீங்கள் எதற்கு பிக் பாஸ் வந்தீர்கள் என்று கூட கேட்டிருந்தார்.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த ரசிகர் ஒருவர் லாஸ்லியாவை பற்றி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லாஸ்லியாவை பற்றி படு பங்கமாக கலாய்த்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.