'வா வாழலாம்' திருமண தேதியை அறிவித்த தமிழ் பிக் பாஸ் ஜோடி - எப்போது தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
பாவனி- அமீர் திருமணம் தேதி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென பிக் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:
அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதற்கு பின் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.
அமீர் – பாவனி காதல்:
அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால், பாவனி கண்டுகொள்ளவில்லை. பின்னர் எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் கூட நடித்து இருந்தார்கள். தற்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் காதலர் தினத்தில் அமீர் – பாவனி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமீர் – பாவனி பதிவு:
அதில் அவர்கள், தளபதி படத்தில் வரும் நான் உன்னை நீங்க மாட்டேன் என்ற பாடலின் மியூசிக் போட்டு தங்களின் காதல் அனுபவம் மற்றும் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்கள். பாவனி, இந்த மூன்று வருடம் எப்படி போச்சு என்று தெரியவில்லை. பிடித்தவர்கள் கூட இருந்தால் மூன்று வருடம் கூட 3 நிமிஷம் போல தான் இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு அமீர், இந்த மூணு வருஷத்தில் எவ்வளவு எண்ண முடியாத நினைவுகள். ஒரு பையனுக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். அவனுக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு,அவனுடைய காதல் ஏத்துக்கிறது. நீ என் காதலை ஏற்றுக்கொள்ளுவாய் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் உனக்கு இப்போது தான் ப்ரொபோஸ் பண்ண மாதிரி இருக்கிறது என்று சொல்கிறார்.
அமீர் – பாவனி திருமண தேதி :
அதற்கு பாவனி, அந்த சமயத்தில் என்னுடைய இதயத்துடிப்பு எவ்வளவு வேகமாக இருந்துச்சு தெரியுமா? பயமும் சந்தோஷமும் கலந்த ஒரு ஃபீல். எங்க மறுபடியும் தப்பான முடிவு எடுத்து விடுவேனோ என்ற பயம். ஆனால், நீ கொடுத்த நம்பிக்கை இவ்வளவு தூரம் ஒரு காதல் பயணத்தில் நடக்க வைத்திருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு அமீர், இதற்கு அப்புறமும் நடக்கப் போறோம். லைப் லாங் முடிகிற வரைக்கும் என்று சொல்கிறார். பாவனி, நல்லா இருக்கு. ஆனால் அடுத்து என்ன? என்று கேட்க, அமீர் தன்னுடைய கையை நீட்டி வா வாழலாம் என்று கூற, பவானியும் சம்மதித்து கை கொடுக்கிறாள். இந்த வீடியோவுடன் ஏப்ரல் 20-ம் தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். தற்போது இந்ததகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.