பிரேக்கிங் நியூஸ் : மதுமிதா விவகாரத்தில் மனித உரிமை அமைப்பில் வழக்கு பதிவானது.! சிக்கலில் போட்டியாளர்கள்.!

By Rajkumar · 19/9/2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பரபரப்பையும் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.அதில் ஜாங்கிரி மதுமிதா பிக் பாஸ் சீசன் 3 இல் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவையும் அன்பையும் பெற்று இருந்தவர்.ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக இருந்த நகைச்சுவை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

https://twitter.com/vijiscdl/status/1174213658521587712

அதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அவரிடம் கேட்டபோது என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார்.

இதையும் பாருங்க : சுடிதாரில் புதிய ட்ரெண்ட்டை அறிமுகம் செய்த ஜூலி.! நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா.!

மேலும், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மதுமிதா அன்றைக்கு நான் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய அனைத்து விஷயங்களும் உண்மைதான். ஆனால் என்ன பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் மன உளைச்சல் தான், ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் மன உளைச்சலுடன் அதிகமாக ஏற்பட்டது. மேலும், வெளியே வந்து 20 நாட்கள் அந்த மன உளைச்சல் அதிகம் இருந்தது. அதனால்தான் மக்களிடம் பேசப்போகிறேன் என்று சொன்னவுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டுப் பேசினேன் என்றும் கூறி இருந்தார்.

https://twitter.com/malini_ram/status/1174324105828417536

மதுமிதா விஷயத்தில் அன்று வீட்டில் இருந்த சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அனைவரும் சம்மந்தபட்டவர்கள் தான் என்று பல குற்றச்சாட்டுகள் வலுத்தது. இந்த நிலையில் மதுமிதா விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்பில் புகார் பதிவாகியுள்ளதாக. மனித உரிமை அமைப்பை சேர்ந்த விஜயலக்ஷ்மி தேவராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே, மதுமிதா விஷயத்தில் விரைவில் அந்த 5 நபர்களிடம் மனித உரிமை அமைப்பு விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full