வனிதாவை வறுத்தெடுத்த நபர் . வாழ்த்து சொல்லி மதுமிதா போட்ட ட்வீட்.

By Rajkumar · 8/7/2020

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

https://www.youtube.com/watch?v=hJhA8IPLw5g&t=575s

ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா. சமீபத்தில் வனிதாவின் திருமணத்தை விமர்சித்த பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றவர்களை வனிதா திட்டி தீர்த்ததால் அவர்கள் இருவருமே வானிதாவிற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

இந்த நிலையில் கவின் நடித்த நட்புனா என்ன தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதாவின் திருமணம் குறித்து வெளுத்து வாங்கி இருந்தால் அதற்கும் பதில் அளித்த வனிதா ரவீந்திரன் வாட்ஸ் அப் மூலம் மிரட்டும் தோணியில் சில மெசேஜ்களை அனுப்பி இருந்தார். இதையடுத்து ரவீந்திரன் அடுத்தடுத்து பேட்டிகளில் பேசி வருகிறார். மேலும், இவர் மீது வனிதா வழக்கு பதிவு செய்யபோவதாகவும் கூறியுள்ளார் வனிதா.

https://twitter.com/ActorMadhumitha/status/1280690699772493824

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனின் பிறந்தநாளுக்கு பிக் பாஸ் மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ரவி சார். புன்னகை குறையாத, அந்த எளிமையான பண்புக்கு நீங்கள் வெற்றியாளராக வலம் வருவீர்கள். நம்பிக்கையுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full