நடத்திய போட்டோஷூட்கள் எல்லாம் கைவிடல - பிக் பாஸ் 2 நடிகர் படத்தில் கமிடடான மகேஸ்வரி.

By Rajkumar · 24/12/2020

சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா என்று சொல்லிகொண்டே போகலாம். போட்டோ ஷூட் பலருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் கூட பல கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல் நடிகையான தர்ஷா குப்தாவிற்கு கூட திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படைப்பான 'ருத்ர தாண்டவம் ' படத்தில் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

https://twitter.com/maheswarichanak/status/1342092076976992256

அந்த வகையில் சமீப காலமாக போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த மகேஸ்வரிக்கும் நீண்ட வருடங்களுக்கு பின் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.

அதன் பின்னர் இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார் அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார்.மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.

https://twitter.com/MahatOfficial/status/1341742098672885762

திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் மஹத் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் மகேஸ்வரி கமிட் ஆகி இருக்கிறார். மேலும், இந்த படத்தை நடிகர் நித்தின் சத்யா தயாரிக்க இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full