பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்திற்கான எலிமினேஷன் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வார நாமினேஷனில் பாலாஜி, சென்ட்ராயன். மஹத் மற்றும் மும்தாஜ் இருந்து வந்தனர். இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் வெளியேறி இருபாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மஹத் மீது ரசிகர்கள் எரிச்சலில் தான் இருந்து வந்தனர் இருப்பினும் கடந்த சில வரங்களாகவே அவர் நாமினேஷனில் இடம்பெறாததால் நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நீண்ட வாரத்திற்கு பின்னர் ரசிகர்கள் எதிர்ப்பதபடி மஹத் நாமினேஷனில் இந்த வாரம் இடம்பெற்றார்.

அதிலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் மஹத், மும்தாஜிடம் செய்த பல அட்டுழியங்கள் ரசிகர்களுக்கு மஹத் மீது மேலும் எரிச்சலை தூண்டியது. மேலும், இந்த வாரம் நாமினேஷனில் இருந்த மற்ற போட்டியாளர்களை விட மஹத்திற்கு தான் ஆதரவு மிகவும் குறைவாக இருந்து வந்தது.

Advertisement

Advertisement

மேலும் , நமது வலைத்தளத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பு பட்டியலில் மஹத்திற்கு தான் மிகவும் அடிமட்ட வாக்குகள் பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் மற்றுமொரு முக்கிய திருப்பமாக மஹத் இந்த வார தலைவராக இருப்பதால், அவர் வெளியேறும் முன்னர் அவரது தலைவர் பதவியை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவரில் யாருக்கு கொடுக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Advertisement