கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. பின்னர் படப்பிடிப்புகளுக்கு கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கி இருக்கிறது.

அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டு வருகின்றனர். அதே போல கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சீரியல் படபிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படி கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் படப்பிடிப்புகள் நடைபெறுவதால் சீரியல் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஞ்சுகின்றனர். இப்படி ஒரு நிலையில் சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள evp பிலிம் சிட்டியில் பிக் பாஸ் செட்டில் பணிபுரிந்த  6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் அதற்கு நான் கொடுத்தது பரிசு என் அம்மா உயிர் – கொரோனாவிற்கு அம்மாவை பறிகொடுத்த ரோஜா சீரியல் நடிகை.

Advertisement

தமிழை போல மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மலையாளத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார். ஏற்கனவே கொரோனா பிரச்சனை காரணமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதன் படப்பிடிப்புகளை சென்னையில் பூந்தமல்லி அடுத்து உள்ள evp பிலிம் சிட்டியில் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இப்படி கடந்த புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் இரண்டு வாரங்களுக்கு மலையாளத்தில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement