திரையில் தோன்றிய கொச்சை டைலாக் - மாயா பெயரை சொன்ன மணி. வைரலாகும் வீடியோ.

By Ajju · 17/3/2024

நிகழ்ச்சி ஒன்றில் மாயா குறித்து பிக் பாஸ் மணி கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி ஏழு சீசங்களை கடந்து இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் ஒருவராக மணி கலந்து கொண்டிருந்தார். இவர் பிரபலமான நடன கலைஞர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார்.

இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் முறையாக நடனத்தை கற்றுக் கொண்டார். பின் இவர் நடனத்தின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.
புகழ் பெற்ற நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் உடன் குழுவில் சேர்ந்து இவர் நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை காண்பித்தார்.

மணி குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவர் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு பின்பு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா நடித்திருந்தார். அந்த சீசனில் இவர் தான் டைட்டில் பட்டத்தையும் பெற்றிருந்தார். அதற்குப்பின் கிங்ஸ் ஆப் டான்ஸ். ஜோடி சீசன் பங்கேற்று இருந்தார்.

https://twitter.com/seyonsense/status/1769305050608984544

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி:

தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், டான்ஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். மேலும், சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக மணி சந்திரா கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் ரவீனா உடன் சேர்ந்து கொண்டு செய்த சேட்டைகள் அளவே இல்லை. இருவரும் காதல் ஜோடிகளாக இருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரில்ஸ் வீடியோக்கள், நடனமெல்லாம் செய்திருக்கிறார்கள்.

மணி வீடியோ:

மணி குறித்து சில சர்ச்சைகள் வந்தாலும் இறுதி வரை கடுமையாக விளையாடி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மணிச்சந்திரா வழக்கம் போல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடியும் வருகிறார். இந்த நிலையில் மணி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர், அவர் ஒரு கேன பீப் என்பதை உங்களுடன் இருந்த போட்டியாளர்களை யாரை குறிப்பிடுவீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலருமே மாயா.. மாயா.. என்று காத்தினார்கள்.

மாயா குறித்து சொன்னது:

மணியும் மாயா என்று சொன்னார். உடனே அவர் மாயாவுக்கு கொடுக்கவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஆனால், ரசிகர்கள் எல்லோருமே மாயா என்று சொல்லியிருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் மணியின் தரமான சம்பவம் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் மாயா. இவர் இதற்கு முன்பு படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைக்கு அளவே இல்லை. மாயா புல்லி கேங் என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full