பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் மணிகண்டன் சக போட்டியாளரான விக்ரமனை ஏன் தனக்கு பிடிக்கவில்லை என்று மற்ற போட்டியாளர்களை பற்றியும் நேரடி ஒளிபரப்பினன் போது கூறினார். பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியை விறுவிறுப்பாக்க பிக் பாஸ் பல பதிய டாஸ்குகளை கொடுத்து வருகிறார்.அந்த வகையில் தொடக்கம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக எந்த சீசன்களில் இல்லாத வாரு 4 முறை பிக் பாஸ் வீட்டின் தலைவரான மணிகண்டன் இந்த பிக் பாஸ் சீசனில் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

Freeze Task :

இவர் தொடக்கத்தில் எல்லா போட்டியாளர்களிடமும் அன்பாக பேசி வந்த இவர் அசீமுடன் இணைந்து விக்ரமனை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் இவர் இப்படி செய்தது தான் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம்.இவர் வெளியேறியதற்கு முன்னதாக “Freez Task” நடந்தது `அதில் மற்ற போட்டியாளர்களில் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதில் மணிகண்டனின் குடும்பத்தினரும் வந்திருந்தனர், அப்போது சில சுவாரசியமான நிகழ்வுகளின் நடந்தது.

Advertisement

மணிகண்டன் அவரது தங்கை நடித்திருந்த “ட்ரைவர் ஜமுனா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு மணிகண்டன் சில சீரியல்களிலும், பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு கலர்ஸ் விடிவில் ஒளிபரப்பான வேலுநாச்சியார் நாடகத்திலும் நடித்திருந்தார்.

வான வேடிக்கையுடன் வரவேற்பு :

மேலும் ஒளிபரப்பான அவரது மனைவியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்த பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 80 நாட்களுக்கு மேலே இருந்து தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடன் அவரது வீட்டில் வான வேடிக்கைகளுடன் மணிகண்டனை வரவேர்த்தனர். இந்த நிலையில் நேரடி ஒளிபரப்பில் வந்த மணிகண்டன் சக போட்டியாளர்களை பற்றிய பல விஷியங்களை அதில் கூறியிருந்தார்.

Advertisement

எதிர்பாராமல் வெறியேறினேன் :

அவர் கூறியதாவது `தான் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க விரும்பியதாகவும் ஆனால் மக்கள் நான் எதிர்பார்க்காத போது பிக் பாஸை விட்டு வெளியில் அனுப்பியதாகவும் கூறியிருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அசீம், மைனா, குயின்சி, கதிரவன் போன்றவர்களை தனக்கு பிடித்திருந்ததாகவும். விக்ரமனுக்கும் தனக்கும் தொடக்கத்தில் இருந்தே ஆகமல் மனக்கசப்பு இருந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

Advertisement

விக்ரமன் உடனான பிரச்சனை :

விக்ரமனுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடக்கத்தில் பொம்மை டாஸ்கின் போது உருவானது என்றும் அதற்கு பிறகு அந்த வெறுப்பு கடைசி வரையில் இருந்ததாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த விஷயத்தை தவிர மற்ற எந்த பிரச்னையும் இல்லை, அவர் ஒரு நல்ல மனிதர், நேர்மையாக இருக்கக்கூடியவர். அவரிடம் இருந்துதான் எப்படி இக்கட்டான சூழ்நிலைகளை பொறுமையாக கையாளுவது என்று கருக்கொண்டதாகவும், விக்ரமன் வெளியில் வந்த பிறகு நல்ல நன்பர்களாக இருப்போம் என்று மணிகண்டன் அந்த நேரடி ஒளிபரப்பில் கூறியிருந்தார்.

Advertisement