இது குடும்பங்கள் பார்க்கும் ஷோ இல்லையா? பிக் பாஸ் போட்டியாளரின் செயலை கண்டு முகம் சுளிக்கும் ரசிகர்கள்.

By subhashini · 28/11/2023

ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளர்கள் எல்லை மீறி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்தியா முழுவதும் உள்ள பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் தான் ஒளிபரப்பி வந்தார்கள். அதற்கு பின் தான் பிற மொழியில் ஒளிபரப்பினார்கள். மேலும், வருடம் வருடம் ரசிகர்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும் பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி 58 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அனல் பறந்து கொண்டு சென்றிருக்கிறது. மற்ற சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கின்றனர். அதேபோல் தெலுங்கிலும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Dilnawaz ali (@munawar_.faruquiiii)

ஹிந்தி பிக் பாஸ்:

வழக்கம்போல அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் அதிக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோகளை ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியான ஹிந்தி பிக் பாஸ் குறித்த வீடியோ தான் சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 17:

இந்தியில் தற்போது பிக் பாஸ் சீசன் 17 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாகவே இந்தி பிக் பாஸ் என்றாலே கிசு கிசுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த 17வது சீசனில் போட்டியாளர்கள் இருவரும் எல்லை மீறி நடந்து இருக்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் அருகில் இருந்தும் கட்டியணைத்தும், லிப் லாக் முத்தம் கொடுத்தும் மோசமாக நடந்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Dilnawaz ali (@munawar_.faruquiiii)

ரசிகர்கள் கண்டனம்:

இந்த நிகழ்ச்சியை பிறர் பார்க்கிறார்கள் என்று கூட நினைக்காமல் எல்லை மீறி இவர்கள் இருவரும் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ரொமான்ஸ் செய்த வீடியோ தான் தற்போது சோசியல் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், எப்படியெல்லாம் கூட நிகழ்ச்சியில் செய்வதா? தயவு செய்து இவர்களை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுங்கள் , இது குடும்பம் பார்க்கும் நிகழ்ச்சியா? என்றும் பலரும் பலவிதமாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full