'எல்லாம் ஒகே தான மான்னு கேட்டார்' - விஜய் குணம் பற்றி நெகிழ்ந்த பிக் பாஸ் மாயா

By subhashini · 17/11/2024

தளபதி விஜய் குறித்து பிக் பாஸ் மாயா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் மாயா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் நடித்திருந்தார்.

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மாயாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் நாட்கள் செல்ல செல்ல இவருடைய செயல்கள் கடுப்பை ஏற்றி இருக்கிறது. மற்ற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, குரூப் பார்ம் செய்து கொண்டு மற்றவர்களை தாக்கி பேசுவது போன்ற பல காரணங்களால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு உண்டானது. இருந்தாலும், இவர் தாக்குப் பிடித்து டாப் 5ல் வந்தார்.

பிக் பாஸ் மாயா:

மேலும், இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை மாயா பிடித்து இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் மாயா படங்களில் கமிட்டாகி இருக்கிறார். குறிப்பாக, இவர் கதாநாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் குறித்து நடிகை மாயா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அந்த நாளில் நடந்த மறக்க முடியாத அழகான விஷயத்தை எனக்குள்ளே வைத்து இருக்கிறேன். ஆனால், அந்த மனிதனுடைய அழகான மனம் குறித்து சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

பிக் பாஸ் மாயா பதிவு:

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு கோட் படத்தினுடைய படப்பிடிப்பு தளத்தில் தளபதியை நான் சந்தித்தேன். அவர் என்னுடைய வேலைகளை கவனித்து வருவதாக நான் கேள்விப்பட்டேன். அது என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தியது. ஒரு சிறிய ஆர்டிஸ்ட்டை அவர் பாராட்டியிருந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதனால் தான் அவரை சந்திக்கப் போனேன். இது எல்லாம் அவர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தாலும் அவர் செய்தார்.

விஜய் குறித்து சொன்னது:

இது தான் என்னை ரொம்பவே கடினமாக உழைக்க வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு அவர் ஊக்குவிக்கும் விதமாகவும், என்னையும் இன்ஸ்பயர் செய்தது. அவர் என்னிடம் 'எல்லாம் ஓகே தான் மா' என்று கேட்டார். அது என்றுமே மறக்க முடியாது என்று நிகழ்ச்சியில் பதிவிட்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்து கொண்டு இருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

விஜய் குறித்த தகவல்:

கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனைகளையும் செய்திருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் குதிக்கிறார். சமீபத்தில் தான் இவர் தன்னுடைய கட்சி கொடியினையை அறிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அக்டோபர் மாதத்தின் கடைசியில் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

behindtalkies AMP · Quick view
View full