டைட்டில் வின்னர் அர்ச்சனா குறித்து மாயா போட்ட பதிவு - கழுவி ஊற்றும் ரசிகர்கள். இதான் காரணம்

By Rajkumar · 16/1/2024

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் பைனல் கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

https://twitter.com/rocketUOfficial/status/1747178636476874782

இறுதியில் இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர்தகுதி பெற்று இருந்தனர். இதில் Ticket To Finale மூலம் விஷ்ணு ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இறுதியில் முதல் ஆளாக விஷ்ணு வெளியேற அவரை தொடர்ந்து தினேஷ் வெளியேறினார். இப்படி விஷ்ணு மற்றும் தினேஷ் இருவரும் வெளியேற அர்ச்சனா, மணி, மாயா மட்டும் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அர்ச்சனாவிற்கு முதல் இடமும் மணிக்கு இரண்டாம் இடமும் கிடைத்து இருந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதை விட மாயா வெளியேற்றப்பட்டதை தான் பலரும் கொண்டாடி இருந்தனர். அதிலும் எந்த red cardஐ கொடுத்து மாயா பிரதீப்பை அனுப்பினரோ அதே red card கட்டத்திற்குள் மாயா நின்று மாயா வெளியேற்றப்பட்டார் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

https://twitter.com/kavalan_rajini/status/1747186565762392305

இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவை பிடிக்காது என்று கூறி இருந்த மாயா, தற்போது அர்ச்சனாவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.  "அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நீ நினைத்ததுபோல உன் வாழ்க்கையில் பூ பூக்கும் , செடி வாடுவதாக தெரிந்தால் என்னை கூப்பிடு, நான் வந்து தண்ணி ஊத்துறேன்" என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மாயாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதற்க்கு முக்கிய காரணம் மாயா வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் பேசிய போது 'முன்னாடியே சொன்ன மாதிரி நான் ஏற்கெனவே வின்னர்தான். இப்படியான மக்களை நான் சம்பாதிச்சுட்டேன்". என கரவொலிகள் எழும்பிய ரசிகர்களை நோக்கி கூறியவர் ," பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் அவ்ளோ நட்பை சம்பாதிச்சு வச்சிருக்கேன். விக்ரமின் தன்னம்பிக்கை ரொம்பவே முக்கியம்.

யார் என்ன சொன்னாலும் விக்ரம் நினைச்ச மாதிரி அவன்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என்று அர்ச்சனா மீது வன்மத்தை கக்கினார். அதே அர்ச்சனாவின் வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். இந்த பதிவில் 'பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது' என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதே போல

Tamil Behind Talkies AMP · Quick view
View full