ஆண்களை மயக்க அப்படி டிரஸ் போடுறேனா? இன்ஸ்டா புகைப்படங்கள் குறித்து மாயா கொடுத்த விளக்கம்.

By Rajkumar · 17/2/2024

தான் அணிந்த கிளாமர் உடை குறித்து விமர்சித்த நெட்டிசனுக்கு மாயா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாயா கிருஷ்ணன். இவர் நடிகை மட்டுமில்லாமல் தியேட்டர் ஆர்டிஸ்ட்டும் ஆவார். இவர் பி டெக் முடித்துவிட்டு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

அதற்குப் பிறகு இவர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார். பின் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் நடிகையானார் மாயா. அதன் பின் இவர் தொடரி, மகளிர் மட்டும், ஏண்டா தலையில எண்ண வைக்கல போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விக்ரம் திரைப்படத்தின் மூலம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம்.

மாயா குறித்த தகவல்:

இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் கேமியோ ரோலில் மாயா நடித்திருந்தார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியிருந்தார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை செய்திருந்தது. அதுமட்டுமில்லாமல் மாயா சில வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா கலந்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து முடியும் வரை மாயாவை நெட்டிசன்கள் திட்டியும் வறுத்தெடுத்தும் இருந்தார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார். இது பலருக்குமே ஆச்சரியம் என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மாயயா பேங்காங் சென்றிருக்கிறார். அங்கு அவர் பிகினி உடை அணிந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஆண்களை மயக்கத் தான் இப்படி கவர்ச்சியான ஆடைகளை மாயா போட்டு வருகிறார் என்றெல்லாம் மோசமாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

மாயா பதிலடி:

இதற்கு மாயா, இங்கே இருக்கும் எல்லா பெண்களும் மற்றவர்களை கவரவும், நல்லா தெரியவும், கிளாமராக தெரியணும் என்பதற்காக எல்லாம் கிளாமர் உடைகளை போடுவது கிடையாது. அவர்களுக்கு என்ன விருப்பமாக இருக்கிறதோ அந்த உடையை தான் போடுகிறார்கள். பிகினி உடை, மினி ஸ்கர்ட் அணிவதால் அது ஆபாசம் கிடையாது. இந்த சமூகத்தில் என்ன சொன்னாலும் உங்கள் காதில் கேட்டுக் கொள்ளாமல் உங்களுக்கு என்ன ஆடை பிடிக்குமோ அதை அணியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full