வாய் தவறி பேசிட்டேன், நிறைய படங்களுக்கு கால் சீட் கொடுத்திருக்கேன் ஜாமீன் கொடுங்க - கூசாமல் சொன்ன மீரா மிதுன்

By Rajkumar · 19/8/2021

சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.ஆனால், போலீஸ் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய்து உள்ளனர். தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

https://www.youtube.com/watch?v=gJgtzvGWm_8

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு,  சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜர் படத்தப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் காதலரான கலர் கோழி குஞ்சி எனப்படும் அபிஷேக் சேமியையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இப்படி எல்லாம் படம் எடுத்தா மதிக்கமாட்டாங்க - செல்வாவின் டீவீட்டுக்கு திரௌபதி இயக்குனர் போட்ட கமன்ட் - ரசிகர்களின் ரியாக்ஷன்.

தற்போது இருவரும் புழல் சிறையில் கம்பி என்னிக்கொண்டு இருக்கின்றனர். சிறையில் இருக்கும் மீரா மிதுன் போலீசாரின் விசாரனைக்கு ஒத்துழைக்காமல் அடாவடி செய்து வருகிறாராம். அவரை மன நல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறதுஇந்நிலையில், மீரா மிதுன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=q5eLUJWR8nk

அதில்,தான் பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன் என மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மீராவின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full