எப்போ கைது பண்ண போறீங்க - கடுப்பாகி பிரபல நடிகை போட்ட பதிவு.

By Rajkumar · 11/8/2021

சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1423524681181581312

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார். தீ தன்னுடைய முகத்தை காபி செய்கிறார் என்றும், தமிழ் சினிமாவில் எஸ்சி இனத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை துரத்த வேண்டும் என்று மீரா மிதுன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் எஸ் சி இனத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறான வழியில் செல்வதால் தான் உங்களை எல்லாம் அப்படி பார்க்கிறார்கள் என்றும் மீராமிதுன் பேசியி இருந்தார்.

https://twitter.com/Selva39573985/status/1424930958000627715

இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர். அதே போல மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அதே போல பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் நடிகையும் மருத்துவரமுமான ஷர்மிலா, இரண்டு நாளா இதான் சொல்றீங்க எப்போ கைது செய்வீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full