சூப்பர் மாடலாக சவடால் போட்டுகொண்டு சிறைக்கு சென்று, சூம்பி போன மாடலாக வெளியில் வந்த மீரா - வீடியோ இதோ.

By Rajkumar · 24/9/2021

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.ஆனால், போலீஸ் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய்தனர்.

https://www.youtube.com/watch?v=Vet79hbAYQk

தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அதே போல மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : கர்ணன் படத்தை விட ரெண்டு மடங்கு இந்த படம் ஹிட் அடிக்கும் - மேடையில் பேசிய ருத்ர தாண்டவம் படத்தின் பிரபல நடிகர்.

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் கேட்டு அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் கோவிட் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையேற்ற நீதிபதி, மீராமிதுன் மற்றும் அவரது நண்பரர் அபிஷேக்கிற்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட 40நாட்கள் கழித்து நேற்று அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தார். கைது செய்த போது சவடால் விட்டுக்கொண்டு போன மீரா மிதுன் சிறையில் இருந்து வெளியேறிய போது தலையில் முக்காடு போட்டுகொண்டு எந்த வித சத்தமும் இல்லாமல் சைலன்டாக காரில் ஏறி சென்றார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full