ட்விட்டரை இப்படி பயன்படுத்தாதே. ரஜினி, விஜய் குறித்து பேசிய மீரா மிதுனுக்கு, சனம் பதிலடி.

By Rajkumar · 14/7/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

https://twitter.com/SamSanamShetty1/status/1282828786354937857

அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய மீரா மிதுன், சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி மற்றும் விஜய் குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

அதில், தமிழ்நாடு செத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ரஜினிகாந்த் (கன்னடர்) விஜய் (கிறிஸ்துவர்) இவர்கள் இருவரும் என்னுடைய புகழை கெடுக்க பார்க்கிறார்களா ? இவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன். கடவுள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/SamSanamShetty1/status/1282922370697551873

இந்த நிலையில் இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ள சனம் ஷெட்டி, மொழியை இழிவுபடுத்தி ஜாதியை விளம்பரப்படுத்த ட்விட்டரை தவறாக பயன்படுத்தாதீர்கள் ஒருவரை குற்றம் சொல்கிறீர்கள் என்றால் அதற்கு தகுந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு பேசவும் என்று ட்வீட் செய்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான இவர் அழகி பட்டத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக இவரிடம் இருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. அந்த பட்டம் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மீரா மிதுன் அழகிப் போட்டிகளை நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவர் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

behindtalkies AMP · Quick view
View full