மரக்கன்று எப்படி நடுவதுனு விவேக்கிடம் கத்துக்கோங்க - விஜய்யை கேலி செய்த மீரா. விவேக் கொடுத்த செருப்படி பதில்.

By Rajkumar · 12/8/2020

கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருப்பது மீராமிதுன் ட்விட்டர் பதிவுகள் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான மீராமிதுன் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஆபாச புகைப்படங்களை பதிவிடுவது, புகை பிடிப்பது, மது குடிப்பது என்று பல்வேறு சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார் மீரா மிதுன்.

https://twitter.com/meera_mitun/status/1293195605875990528

என்னென்னவோ கொரலி வித்தை கட்டியும் பிரபலம் அடையாததால், தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களை குறிவைத்து ட்விட்டரில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான பதிவுகளை செய்து வந்தார். அப்போது அம்மணிக்கு பிரபலம் ஏற்படாததால், தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்து வரும் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் பெரும் வைரலாக பரவ, தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவதூறான பதிவுகளை செய்து வருகிறார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : ஆப்ரேஷனுக்கு பின்னர் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலுக்கு நடனம் ஆடிய லோகேஷ் பாப். பாராட்டிய சந்தோஷ் நாராயணன்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் மரக்கன்றை நட்டு, நடிகர் விஜய்க்கு மரக்கன்று நட சவால் விட்டிருந்தா.ர் இந்த சவாலை ஏற்று விஜய் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது, ஆனால் வழக்கம்போல மீராமிதுன் விஜய்யின் இந்த பதிவையும் கேலி செய்து இருந்தார்.

https://twitter.com/JACKSparrow__ON/status/1293395654891380736

அதில், உங்கள் வீட்டுக்குள்ளேயே மரக்கன்றை நடுவது சமூக அக்கறை இல்லை. எப்படி மரக்கன்றை நட வேண்டும் என்று விவேக் சாரிடம் காத்துக்கொள்லுங்க என்று கேலியாக கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் மரக்கன்று நட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக், மகேஷ் பாபு சார் விஜய் சார் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இயற்கைக்காக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்தால் ரசிகர்களும் அதை பின்தொடர்ந்து நல்ல காரியங்களை செய்வார்கள்.

https://twitter.com/its_pokkiri3/status/1293396582239334400

நாம் இதனை பாராட்ட வேண்டும். தயவு செய்து ஒருவருடன் இன்னொருவரை ஒப்பிடாதீர்கள். நம்முடைய நோக்கம் பசுமை பூமி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.விவேக் பதிவிட்டுள்ள இந்த வீட்டுக்கு தான் என்று பல ரசிகர்களும் விவேக்கின் இந்தடீவீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல விஜய் மரக்கன்று நட்டதை வைத்து விஜய் ரசிகர்களும் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு வரும் புகைப்படங்களையும் சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full