தடுப்பூசியை சாக்காக சொல்லி சாமர்த்தியமாக ஜாமின் வாங்கியுள்ள மீரா. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By Rajkumar · 23/9/2021

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.ஆனால், போலீஸ் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய்தனர்.

தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அதே போல மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வந்த சிம்புவிடம் கேட்ட கேள்வி- பாதியில் எழுந்து சென்ற சிம்பு.

இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மட்டுமல்லாம் மீரா மிதுன் மீது மேலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவரை தர குறைவாக பேசி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மீரா மிதுன் தரப்பில் வாதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் கேட்டு அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் கோவிட் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையேற்ற நீதிபதி, மீராமிதுன் மற்றும் அவரது நண்பரர் அபிஷேக்கிற்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

behindtalkies AMP · Quick view
View full