பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே விஜய் டிவியில் அசிங்கபட்ட மீரா.! வீடியோவை பாருங்க.!

By ·

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சர்ச்சைக்குரிய போட்டியாக இருந்து வருபவர் மீரா மிதுன் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே இவருக்கும் அபிராமிக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது அபிராமி, மீரா மிதுன் ஒரு மிகப் பெரிய பிராடு என்றும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் தனது தோழியும் வருவர் என்றும் கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=7u6WbMpYTc0

மீரா மிதுன் மீது அனைவரும் குற்றம் கூறும் ஒரே காரணம் மீரா மிதுன் மாடல் அழகி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்துள்ளதாகவும் , மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு அழகி போட்டிகளை நடத்துவதாக பலரை ஏமாற்றி வந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : பூஜை அறையில் விஜய்யின் புகைப்படம்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! 

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ரேஷ்மாவிடம் தான் ஒரு சூப்பர் மாடல் என்று வாய் கூசாமல் பொய் கூறியிருந்தார் மீரா மிதுன் . மீரா மிதுன் இப்படி அடுக்கடுக்காக பொய்களைக் கூறி வருவருவதால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். மீரா மிதுன் விஜய் டிவிக்கு புதிதானவரல்ல அவர் அசிங்கப்படுவதும் புதிதான விஷயம் அல்ல.

மீரா முதல் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது மீரா மிதுன் மாடல் அழகி பட்டம் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும், அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த சங்கீதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட மீரா மிதுனை கெட் லாஸ்ட் என்று திட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full