அந்த நூலுக்கு பிரச்சனைனு போது இந்த நூல் குரல் குடுத்துச்சி - கமல் குறித்து மீரா மிதுன் சர்ச்சை.

By Rajkumar · 29/7/2020

தற்போது தமிழ் நாட்டில் பல பிரச்சனை சென்று கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் மீரா மிதுன் பிரச்சனை சென்று கொண்டு தான் இருக்கிறது. மீரா மிதுனுக்கு அறிமுகம் தேவையா என்ன ? விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீராமிதுன். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னதாகவே அழகிப் போட்டியில் நடத்துவதாக கூறி பித்தலாட்டத்தை ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழங்கப்படும் பதிந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

https://twitter.com/meera_mitun/status/1288397040225890304

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பின்னரும் பல்வேறு போட்டிகள் குறித்து பல சர்ச்சையான விஷயங்களை கூறி வந்தார்எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் தான் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மீரா மிதுன்.திரிஷாவால் தான் அந்த வாய்ப்பு போனதாக கூறியுள்ளார். மேலும், திரிஷா அவரின் ஜாதியால் தான் சினிமா வாய்ப்பை பெற்றுவருகிறார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் திரிஷா பஞ்சாயத்தில் கமலையும் இழுத்து விட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1288171682578874368

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திரிஷா பீட்டா அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததால் பலர் திரிஷாவை கடுமையாக விமர்சித்தனர். அப்போது கமல் திரிஷாவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டிருந்தார். அதை தற்போது குறிப்பிட்டுள்ள மீரா மிதுன், ஒரு நூலுக்கு பிரச்சினை என்றதும் இன்னொரு நூல் குரல் குடுத்தது. ஆனால் அதே நூல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என் பெண்மைக்கு பிரச்சினை என்றபோது போது குரல் கொடுக்காதது ஏன் ? நான் நூல் ஜாதி இல்லாததால் தானே என்று பதிவிட்டுள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full