சூர்யாவிற்கு நடிப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 31/7/2020

தற்போது தமிழ் நாட்டில் பல பிரச்சனை சென்று கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் மீரா மிதுன் பிரச்சனை சென்று கொண்டு தான் இருக்கிறது. மீரா மிதுனுக்கு அறிமுகம் தேவையா என்ன ? விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீராமிதுன். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னதாகவே அழகிப் போட்டியில் நடத்துவதாக கூறி பித்தலாட்டத்தை ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழங்கப்படும் பதிந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

https://twitter.com/meera_mitun/status/1288393249724358656

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பின்னரும் பல்வேறு போட்டிகள் குறித்து பல சர்ச்சையான விஷயங்களை கூறி வந்தார்எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய்,கமல் என்று பலரை பற்றி சர்ச்சை ஏற்படுத்தி வந்த மிதுன், தற்போது சூர்யாவை பற்றி ஒரு சர்ச்சை ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். மீரா மிதுன் ஒரு சில படங்களில் தலைகாண்பித்து உள்ளார். அதில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படமும் ஒன்று. இந்த படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் சூர்யா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன், சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னனு கூட தெரியாது. நான் என்னுடைய ஷாட்டை ஒரே டேக்கில் முடித்து விட்டேன். ஆனால், அவர் 10 20 டேக் எடுத்தார். அவருக்கு சுத்தமா நடிப்பு திறமையை கிடையாது. என்னுடைய பகுதி அந்த படத்தில் இருக்க கூடாது என்று அவர் நீக்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full