உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை மு க ஸ்டாலினை டேக் செய்த மீரா மிதுன்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.
https://twitter.com/meera_mitun/status/1283740636093378565
அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான இவர் அழகி பட்டத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக இவரிடம் இருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. மேலும், இவர் அழகிப் போட்டிகளை நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த.து இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவர் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னரும் சேரன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
https://twitter.com/meera_mitun/status/1283332427683790848
அதேபோல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று பல்வேறு அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் மீராமிதுன் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நாம் இருவரும் இணைந்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்றும், நாம் இருவரும் இணைந்து வெற்றி பெறுவோம் என்றும் கூறி உதயநிதி ஸ்டாலினையும் முக ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார்