உங்கள் படம் ஓட என் பெயர் தேவைபடுகிறதா? கூச்சமே இல்லாமல் கூறிய மீரா. கண்ட மேனிக்கு கிழிக்கும் ரசிகர்கள்.

By Rajkumar · 31/3/2020

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்.

https://www.instagram.com/p/B-XRFw-DAVh/

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சி புகைப்படங்களாக தான் இருந்து வருகிறது. இதனால் இவரை வெறுப்பவர்கள் தான் அதிகமாகி வருகிறார்கள்.

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைபடாத மீரா மிதுன் தொடர்ந்து எதாவது கவர்ச்சியான புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு மேலும், அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை கூறி ரசிகர்களிடம் வாங்கிகட்டிகொள்கிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவை வம்பிழுத்து ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளகியுள்ளார்.

சமீபத்தில் நடிகை மீரா மிதுன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அசிங்கமே இல்லாத கோலிவுட் சினிமா துறை. சமீபத்தில் வந்த அனைத்து படங்களிலும் கதாநாயகிகளுக்கு 'மீரா'என்று என்னுடைய பெயரை வைத்திருக்கிறார்கள். ஆணாதிக்கம் கொண்ட கோலிவுட்வாசிகளே உங்கள் படம் ஓடுவதற்கு என்னுடைய பெயர் தேவைப்படுகிறதா. என்று குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உன் உண்மையான பெயர் தமிழ் செல்வி தானே என்று கூறி வருவதோடு மீரா மிதுனை கண்ட மேனிக்கு வசைபாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மீரா மிதுன், அதாவது நம்ம தமிழ் செல்வி குறிப்பிட்டது போல சமீபத்தில் வெளியான ஆதித்ய வர்மா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் தான் கதாநாயகிகளின் பெயர் மீரா என்று வைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை இந்த படங்களை தான் சொல்கிறாரரோ என்னவோ.

Tamil Behind Talkies AMP · Quick view
View full