மீரா மிதுன் மீது போலீஸ் புகார்- ஷாலு ஷம்மு அளித்த ஷாக்கிங் பேட்டி. என்ன வேல பண்ணி இருகாங்க பாருங்க மீரா.

By Rajkumar · 14/8/2020

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருப்பது மீரா மிதுனின் ட்விட்டர் பதிவுகள் தான். சமீப தினங்களாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோ மற்றும் பதிவுகளை போட்டு வரும் மீரா மிதுனை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். மீரா மிதுனுக்கு எதிராக பல்வேரு ஆதாரங்களை ஜோ மைக்கேல் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது நடிகை ஷாலு ஷம்முவும் மீரா மிதுனை வாட்டி எடுத்து வருகிறார்.

ஷாலு ஷம்மு பற்றி சொல்ல வேண்டியது இல்லை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு சம்மு அதன் பின்னர் தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் மீரா மிதுனின் மாடலிங் துறை தோழியாக இருந்தவர் தான்.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு ஷம்மு, மீரா மிதுன் இவை அனைத்தையும் தெளிவாக பிரபலத்திற்காக மட்டும் தான் செய்கிறாள், அவலுடன் நான் நட்பில் இருந்த போதே அவள் இப்படி தான் மற்றவர்களை பற்றி பேசுவாள். அவளின் குணத்தை அறிந்து நான் அவளுடன் பழகுவதை நிறுத்திவிட்டேன் விரைவில் அவள் கண்டிப்பாக மாட்டுவாள் என்று கூறியிருந்தார் ஷாலு ஷம்மு. ஷாலு சம்முவின் இந்த பேட்டியை பார்த்துவிட்டு மீரா மிதுன், ஷாலு சம்மு மீது வழக்கு தொடர போவதாக கூறியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=_NrG2v-VtHU&t=308s

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனுக்கு முன்னதாக மீரா மிதுன் மீது ஷாலு ஷம்மு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், மீரா மிதுனை பற்றி பேசியதால் தனக்கு தினமும் கொலை மிரட்டல் வருவதாகவும், தொடர்ந்து மீரா மிதுனை பற்றி பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று செல் போனில் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full