டேய் பிராடு, ஆரி எல்லாம் ஒரு ஆளே இல்ல - ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்திய மீரா மிதுன்.

By Rajkumar · 19/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டுஇருந்தனர் . அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

https://twitter.com/meera_mitun/status/1351405615214546944

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வந்தார்.

இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தையும் பிடித்தார். அந்த அளவிற்கு மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ள ஆரி குறித்து சர்ச்சை நாயகியான மீரா மிதுன் ஏளனமாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டேய் பிராடு, ஆரிலாம் ஆளே இல்ல. பெய்லியர் வேலைக்கு ஆகாத பார்ட்ஸ் டேமேஜ் ஆன வயசான ஆளு.

https://twitter.com/meera_mitun/status/1351403524194648065

காசு கொடுத்து பில்ட்டப் கொடுக்கற அல்லக்கைங்க என்று பதிவிட்டுள்ளார். அதே போல பாலாஜி நீ தான் வின்னர். நான் ஆரம்பத்தில் இருந்தே உனக்கு எதிராக நடக்கும் விஷங்களை சொல்லி வருகிறேன் என்று கூறியுள்ளார். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த பலரும் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full