எல்லாம் வேஸ்ட். காத தொட்டு மூக்கத் தொட்டு கடைசில 'தல'ய தொட்ட மீரா மிதுன். நீங்களே பாருங்க.

By Rajkumar · 27/7/2020

விஜய் தொலைக்காட்சியில இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு சளைக்காமல் இருந்து வந்தது. அதிலும் சமீபத்தில் முடிந்த மூன்றாவது சீசனில் பங்குபெற்ற ஒருசில போட்டியாளர்கள் செய்தசர்ச்சையான விஷயங்களால் இந்த சீசனின் டிஆர்பி எகிறி விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் சர்ச்சைக்கு மறு உருவமான மீராமிதுன் இந்த சீசனில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாளராக இருந்து வந்தா.ர் மாடலும் நடிகையுமான மீரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

https://twitter.com/kaultheking/status/1287399225358082048

மேலும், மாடல் அழகி என்ற பெயரில் இவர் பல்வேறு நபர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாகவும் ஜோ மைக்கேல் என்பவர் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டே இருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார் மீராமிதுன்.சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே '8 தோட்டாக்கள்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பல்வேறு சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீப காலமாக சினிமாவை பிரபலங்களுடன் எப்போதோ எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் தான் நடித்ததாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த காட்சி படத்தில் வரவில்லையாம்.

https://twitter.com/meera_mitun/status/1287411320044756992

இதுகுறித்து பதிவிட்டுள்ள மீரா மிதுன், இதுவரை யாரும் எனக்காக குரல் கொடுக்கவில்லை. நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறும் என்று யாரும் உறுதி அளிக்கவில்லை. அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் கூட உறுதி அளிக்கவில்லை. இரவு பகலாக இந்த படத்திற்காக நான் செலவழித்த நேரமும் என்னுடைய உழைப்பும் அத்தனையும் வேஸ்ட் என்று குறிப்பிட்டிருக்கிறார் மீரா மிதுன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full