பிக் பாஸ் மீரா மிதுனை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு பெயர் போனவர். மீரா மிதுன் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியின் வெற்றியாளர் ஆவார். ஆனால், அந்த வெற்றியை மீண்டும் அவரிடம் இருந்து பரித்து விட்டார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசை பிரதமர் மோடி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பிறகு என்னை முதல்வர் ஆக்க வேண்டும் என்று ஒரு புது சர்ச்சையை கிளப்பி உள்ளார் மீரா மிதுன். தற்போது மீரா மிதுன் ட்வீட் ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியது, தற்போது இருக்கும் தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் தமிழக அரசை பிரதமர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அதோடு என்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன். தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் எல்லாரையும் ஒரே மாசத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன். தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக 2 மாசத்தில் மாற்றுவேன். இந்திய பொருளாதாரத்தையே 6 மாசத்தில் உயர்த்துவேன். தமிழக அமைச்சர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள். நான் பிஎஸ்ஸி மைக்ரோபயாலஜியும், எம்எஸ்ஸி பயோடெக்னாலஜியும் படிச்சிருக்கிறேன்.

Advertisement

அதனால் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நான் என்னுடைய தாய் நாட்டை காப்பேன் என்று பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனவை கட்டுப்படுத்த தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி கொண்டு இருக்கும் நிலையில் தமிழக அரசை குறை சொல்லுவது ஏற்று கொள்ள முடியாத விஷயம். அதை விட தன்னை முதல்வராக்க வேண்டும் என்று எந்த கட்சி அமைப்பையும் சாராத ஒருவர் கோரிக்கை விடுத்திருப்பது காமெடியாக இருக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இவர்களுக்கு எல்லாம் கிண்டல் ஆகி விட்டது. அரசுகளை குறை சொல்லலாம்.

ஆனால், தாங்கள் ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய விமர்சனங்களை பதிவிடுவது சட்ட விரோதமான செயல். மீரா மிதுன் ஒரு அரசியல்வாதி இல்லை. மக்களுக்காக சிறை சென்றவர் இல்லை. எந்தவித போராட்டம், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டவரும் இல்லை. தினம் தினம் பசி, பட்டினியால் செத்து பிழைக்கும் சாதாரண மக்களுக்காக கூட எதையுமே செய்ததும் இல்லை. இப்படி இருந்தும் இவர் என்ன தைரியத்தில் முதல்வராக்க சொல்கிறார் என்றே தெரியவில்லை. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement