பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீரா வெளியிட்ட முதல் வீடியோ.! பார்த்தா நீங்களே கடுப்பாவீங்க.!

By Rajkumar · 3/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடந்த ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார்.

https://www.instagram.com/p/B0qtSKpDrW1/

இவர் வெளியேறுவதற்கு முன்பாக மூன்று நாட்களாகவே இவருடைய பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அதே போல கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.

மேலும், கடைசி நாளில் தான் மீராவிற்கு வாக்கு வரவில்லை என்றும் கமல் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு அளித்த அனைவரும் நன்றி என்று மீரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை கண்ட பலரும் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Tamil Behind Talkies AMP · Quick view
View full