எலிமினேஷன் பெயரை அறிவித்த கமல்.! கண்ணீர் விட்டு அழுத சாண்டி.!

By Rajkumar · 13/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரத்தை கடக்க உள்ளது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று நாளை நமக்கு தெரிந்துவிடும். அதற்கு முன்பாக இந்த வாரம் காப்பற்றபட்டுள்ள ஒரு நபர் யார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வார நாமினேஷனை கமல்ஹாசன் வித்யாசமான முறையில் கையாண்டு உள்ளார். இந்த வாரம் வெளியேற போவது மோகன் வைத்யா என்று கமல் அறிவித்ததும் போட்டியாளர்கள் அனைவரும் கண் கலங்கி விட்டார்களாம். அதிலும் தனது குருநாதர் வெளியேறிவிட்டார் என்று தெரிந்ததும் சாண்டி தான் மிகவும் அழுதாராம்.

ஆனால், அதன் பின்னர் கமல், சிரித்துகொண்டே நான் சும்மா பிராங்க் செய்தேன், மோகன் வைத்யா இந்த வாரம் காப்பாற்றபட்டுவிட்டார் என்று கூறியதும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த காட்சிகள் இன்று அல்லது நாளை ஒளிபரப்பபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அதே போல இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் கமல், வனிதாவை கொஞ்சம் கடுமையாக பேசும் காட்சிகள் இடம்பெற்றதது. இன்றைய நிகழ்ச்சியில் கமல், வனிதாவை லெப்ட் அண்ட் ரைட் வங்கியுள்ளாராம். மேலும், எப்போதும் வனிதாவின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த வீட்டில் வனிதாவின் சத்தத்தை எதிர்த்து கேள்வி கேட்ட தர்ஷனை கமல் பாராட்டியுள்ளாராம்.

அதே போல வனிதா, தான் செய்தது தான் நியாயம் என்று கேட்ட போது அவர்களுக்கு சப்போர்ட் செய்யாமல் நடுநிலையாக நின்ற சாண்டி மற்றும் மோகன் வைத்யாவையும் கமல் இன்று பாராட்டியுள்ளார். அதனை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

நாம் அனைவரும் மோகன் வைத்யா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அவர் காப்பாற்றபட்டுள்ளார் என்ற செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது இந்த வாரம் வெளியேற போவது தான் யார். காத்திருங்கள் விரைவில் அதனை அப்டேட் செய்கிறோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full