'A' என்ற வார்த்தையில் முடியும் நபர் தான் வின்னரா.! ட்வீட் செய்த முக்கிய பிரபலம்.!

By ·

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

பிக் பாஸ் வின்னர் தர்ஷன் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் அவரே வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் ஷெரின் தான் குறையான வாக்குகளை பெற்றிருந்தார் எனவும், எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தர்ஷன் வெளியேறியதால் தற்போது ஷெரின், சாண்டி, முகென், லாஸ்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, முதல் நாளில் இருந்தே முகென் முன்னணியில் இருந்து வருகிறார்.

https://twitter.com/crvgalatta/status/1179639032935960576

இந்த நிலையில் A என்று எழுத்தில் முடியும் நபர் தான் வெற்றியாளர் என்று பிரபல யூடுயூப் நிறுவனத்தில் நிறுவர் வெங்கடேஷ் ட்வீட் செய்துள்ளார். எனவே, losliya அல்லது mugen roa தான் வெற்றியாளராக இருக்கும் என்று அவர் இந்த டீவீட்டில் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும், மற்றுமொரு டீவீட்டில், முகென் தான் வெற்றியாளர் என்றும், இதனை அதிகார பூர்வமாக தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த சீசன் வெற்றியாளர் முகென் தானா என்று ரசிகர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இருப்பினும் சமூக வலைதளத்தில் கூட முகென் தான் பட்ட்டத்தை வெல்ல வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full